என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மறியல் போராட்டம்


என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு:  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர்  மறியல் போராட்டம்
x

என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சேலம்,

என்.ஐ.ஏ. சோதனை

தமிழகத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் அந்த அமைப்பின் நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கையை கண்டித்து சேலம் மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தனர்.

பின்னர் அவர்கள் திடீரென அங்கிருந்த ரவுண்டானா பகுதி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

12 பேர் கைது

அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றி கைது செய்தனர். மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 12 பேரை பழைய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story