மீன்பிடி வலையில் சிக்கிய நல்ல பாம்பு


மீன்பிடி வலையில் சிக்கிய நல்ல பாம்பு
x

சீர்காழி அருகே மீன்பிடி வலையில் பாம்பு ஒன்று சிக்கி கிடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி

சீர்காழி அருகே திருக்கருக்காவூர் கிராமத்தில் உள்ள உப்பனாறு அருகே நல்ல பாம்பு ஒன்று அங்கு வீசப்பட்டு கிடந்த பழைய மீன்பிடி வலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அந்த பாம்பை உயிருடன் பிடிப்பதற்கு அச்சப்பட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற புகைப்பட கலைஞர் பிரவீன் என்பவர் துணிச்சலோடு வலையில் சிக்கியிருந்த அந்த நல்ல பாம்பை உயிருடன் மீட்டு அருகிலிருந்த அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார். அவரது துணிச்சலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.





Next Story