பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு


பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 11 July 2022 8:43 PM IST (Updated: 11 July 2022 8:46 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திண்டுக்கல்

நிலக்கோட்டையில் பேரூராட்சி கூட்டம் நடந்தது. இதற்கு தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முருகேசன் மற்றும் செயல்அலுவலர் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த 13 வார்டு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டம் நடைபெறவில்லை.

இதுகுறித்து கவுன்சிலர்களிடம் கேட்டபோது, தங்களுக்கு உரிய மரியாதை துணைத் தலைவர் கொடுப்பதில்லை என்றும், ஒருமையில் பேசுவதாகவும், இதனால் வார்டுகளில் மக்கள் நல பணிகள் நடைபெறாமல் முடங்கி கிடக்கிறது என்றனர். இந்த சம்பவத்தால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story