பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்
சாத்தான்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தட்டார்மடம்:
தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி அறிவுறுத்தலின் பேரில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனை சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபசிங் தலைமை தாங்கினார். சாத்தான்குளம் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வைகுண்டரமணி நிலவேம்பு கசாயத்தின் மருத்துவ குணம் குறித்தும், நிலவேம்பு கசாயம் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், விளக்கமாக கூறினார். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் வரவேற்றார். தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு சகாயம் வழங்கப்பட்டது. பயிற்சி சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சித்த மருத்துவ மருந்தாளுனர் சங்கரமணி நன்றி கூறினர்.