நீலகிரி மாவட்டத்தில் 2 ஹெக்டருக்கு மேல் உள்ள நிலங்களை விற்க இணையதளம் மூலம் மட்டுமே அனுமதி-மாவட்ட கலெக்டர் அம்ரித் தகவல்


நீலகிரி மாவட்டத்தில் 2 ஹெக்டருக்கு மேல் உள்ள நிலங்களை விற்க இணையதளம் மூலம் மட்டுமே அனுமதி-மாவட்ட கலெக்டர் அம்ரித் தகவல்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 2 ஹெக்டருக்கு மேல் உள்ள நிலங்களை விற்பனை செய்ய இணையதளம் மூலம் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் 2 ஹெக்டருக்கு மேல் உள்ள நிலங்களை விற்பனை செய்ய இணையதளம் மூலம் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம்

தனியார் காடுகளை அழிப்பதைத் தடுக்கவும், அந்த நிலங்களின் பயன்பாடுகளில் மாற்றம் ஏற்படுவதை தடுக்கவும், தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம், 1949-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தின்படி 2 ஹெக்டேருக்கு மேல் பரப்பளவு கொண்ட தனியார் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு நீலகிரி மாவட்ட அரசிதழ் எண்-01, நாள் 15.11.1991-ன் படி தனியார் காடுகளாக அறிவிப்மு செய்யப்பட்டு உள்ளன.

தனியார் காடுகளாக அறிவிப்பு செய்யப்பட்ட நிலத்தினை விற்பனை செய்ய, மேற்கண்ட சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள மாவட்ட கலெக்டர் தலைமையிலான மாவட்ட குழுவிடம் கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும்.

புலத்தணிக்கை

இதன்படி நிலம் விற்பனை அனுமதி கோரும் விண்ணப்பங்களை http://nilgiris.nic.in என்ற இணையதளத்தில் சமர்பிக்கும் நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. மேற்கண்ட இணையதளமானது மாவட்ட நிர்வாகத்தால் தற்பொழுது முழுமையாக மேம்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பின்பு விண்ணப்பதாரர்கள் விற்பனை செய்ய அனுமதி கோரியுள்ள நிலங்கள், குழு உறுப்பினர்களால் புலத்தணிக்கை செய்யப்பட்டு, அவர்களின் பரிந்துரைகளும் இணைய வழியில் சமர்ப்பிக்கப்பட்டு, மாவட்ட குழுவின் முன் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, முடிவு செய்யப்படுகின்றன. இறுதியாக நிலத்தை விற்பனை செய்ய அனுமதி வழங்கும் உத்தரவும் மேற்கண்ட இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்த உத்தரவினை விண்ணப்பதாரர்கள் தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

இந்த புதிய நடைமுறை மூலம், விண்ணப்பங்கள் சமர்பித்தல் முதல், நிலம் விற்பனை செய்ய ஆணை வழங்கப்படும் வரையிலான அனைத்து நிலைகளும் இணைய வழியின் மூலமே மேற்கொள்ளப்படுவதால், பொதுமக்கள் விண்ணப்பம் சமர்ப்பித்த நாளிலிருந்து 1 மாத காலத்திற்குள் நிலங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும் நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தை நேற்று முன்தினம் கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வன அலுவலர் கவுதம், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story