நீலகிரி மாவட்டத்தில் மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்


நீலகிரி மாவட்டத்தில் மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 26 July 2023 12:30 AM IST (Updated: 26 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய 3 மின் கோட்டங்கள் உள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் 39 மின் பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் வீடு மற்றும் வணிக இணைப்புகள் என சுமார் 2 லட்சத்து 96 ஆயிரம் இணைப்புகள் உள்ளது. நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை தினசரி சுமார் 95 முதல் 100 மெகாவாட் மின்சாரம் தேவையாக உள்ளது. நீலகிரி மாவட்ட அணை மூலம் தினசரி உற்பத்தி செய்யப்படும் 835 மெகாவாட்டில் சுமார் 100 மெகாவாட் நீலகிரி மாவட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது.இந்தநிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நீலகிரி மின் பகிர்மான வட்டம் சார்பில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யும் சிறப்பு முகாம் கடந்த 24-ந் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.இதுகுறித்து நீலகிரி மாவட்டம் மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) ரமேஷ் குமார் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் 39 மின் பிரிவு அலுவலகங்களிலும் தற்போது பெயர் மாற்ற சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இரண்டு தினங்களில் மட்டும் சுமார் 50 பேர் பெயர் மாற்றம் செய்ய மனு கொடுத்துள்ளனர். இந்த முகாம் ஒரு மாத காலம் நடைபெற உள்ளது.இந்த முகாமை பொருத்தவரை அன்றைய தினமே பெயர் மாற்றம் செய்வது உள்பட எந்த வேலையாக இருந்தாலும் முடித்துக் கொடுக்கப்படும். எனவே வழக்கமான தினங்களில் இருப்பது போல் பொதுமக்கள் காத்திருக்க தேவையில்லை. இதனை பயன்படுத்தி ஏராளமான மின் நுகர்வோர்கள் பங்கேற்று மின் இணைப்பு பெயர் மாற்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story