கொய்மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் நீலகிரி விவசாயிகள் பாதிப்பு


கொய்மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் நீலகிரி விவசாயிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் மொத்த சந்தைக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதால், நீலகிரியில் இருந்து கொய்மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நீலகிரி

குன்னூர்,

பெங்களூருவில் மொத்த சந்தைக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதால், நீலகிரியில் இருந்து கொய்மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொய்மலர் சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டு உள்ளனர். கார்னேசன், லில்லியம், ஜெர்பரா, ஹைட்ராஞ்சியா போன்ற கொய்மலர்களை பயிரிட்டு வருகின்றனர். வளர்ந்த கொய்மலர்கள் செடிகளில் இருந்து பறிக்கப்பட்டு, பெட்டிகளில் அடுக்கி வைத்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவிற்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் நேற்று பெங்களூருவில் உள்ள கொய்மலர் மொத்த விற்பனை சந்தைக்கு கர்நாடகா அரசு சீல் வைத்து உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொய்மலர் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட கொய்மலர் சாகுபடியாளர் சங்க தலைவர் வாஹித் சேட் கூறியதாவது:-

விவசாயிகள் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கொய்மலர் சாகுபடி மூலம் 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நேரடியாக வேலை கிடைக்கிறது. தினமும் 300 பெட்டிகளில் கொய்மலர்களை விற்பனைக்காக அனுப்பி வருகிறோம். இதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். பெங்களூருவில் வில்சன் கார்டனில் செயல்பட்டு வந்த கொய்மலர் மொத்த சந்தை வியாபாரிகளுக்கு அனுப்பி வந்தோம். அப்பகுதி குடியிருப்பு என்றும், அங்கு மலர் சந்தை வைக்கக்கூடாது என்றும் கூறி கர்நாடகா அரசு சந்தைக்கு சீல் வைத்து விட்டது.

இதனால் நீலகிரியில் உள்ள ெகாய்மலர் சாகுபடியாளர்கள் மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளோம். இதனால் எங்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான மலர்கள் தேக்கமடைந்து உள்ளது. தமிழக எல்லையில் ெகாய்மலர் மொத்த சந்தை அமைக்க நிலம் ஒதுக்கி தமிழக அரசு சந்தை அமைக்க வேண்டும். இதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதோடு, தமிழக அரசுக்கும் வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story