நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர்கள் சங்க தேர்தல்
நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர்கள் சங்க தேர்தல்
ஊட்டி
நீலகிரி ஸ்டூடியோஸ், புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்படக்கலைஞர்கள் சங்க தேர்தல், ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் குழு ஒருங்கிணைப்பாளர் பாஜி தலைமையில் இதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தலைவர், துணை தலைவர், செயலாளர், பொருளாளர், 4 துணை செயலாளர்கள், துணை பொருளாளர், 10 செயற்குழு உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர் மற்றும் கவுரவ ஆலோசகர்கள் பதவிகளுக்கு மதியம் 2 மணிக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் நேரிலும், குறுஞ்செய்தி மூலமாகவும் வாக்களித்தனர். முடிவில், சங்க தலைவராக உமாசங்கர் 82 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார். தொடர்ந்து, செயலாளராக காந்தி, துணை தலைவராக ஜெகதீஷ், துணை செயலாளர்களாக அருண், சுஜீத், சுதாகர், எம்.எம்.பாபு (சரவணன்), பொருளாளராக ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணை பொருளாளராக ரமேஷ், மக்கள் தொடர்பு அலுவலராக வினோத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கும், புதியதாக இணைந்த உறுப்பினர்களுக்கும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பெற்று தருவதாகவும், அடையாள அட்டை வழங்குவது, மருத்துவ காப்பீட்டு திட்டங்கள், புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளும் வகையில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தனர்.