நீலகிரியில் மீண்டும் கொட்டித் தீர்த்த மழை- கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி


நீலகிரியில் மீண்டும் கொட்டித் தீர்த்த மழை-  கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி
x

நீலகிரியில் மீண்டும் மழை கொட்டித் தீர்த்தது‌. மேலும் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் மீண்டும் மழை கொட்டித் தீர்த்தது‌. மேலும் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

கனமழை

தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கன மழை கொட்டி தீர்த்தது. இதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக மழை அளவு குறைந்து வெயில் அடித்து இதமான காலநிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.

இந்த நிலையில் தற்போது தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவையில் ஓரி நாட்கள் கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு பின்னர் ஊட்டி, அருவங்காடு, குன்னூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

கடும் பனிமூட்டம்

இதனால் ஊட்டி நகர் பகுதியில் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. சாலைகளில் இருந்த குழிகளில் தண்ணீர் தேங்கியால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

இதேபோல் கடும் பனிமூட்டம் ஏற்பட்டதால் சாலையில் எதிரே வந்த வாகனங்கள் சரியாக தெரியவில்லை. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக சென்றன. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடும் குளிருடன் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்து இருப்பதால் கேரட் பீட்ரூட் பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடியில் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story