கோத்தகிரியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி -நீலகிரி அணி அபார வெற்றி


கோத்தகிரியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி -நீலகிரி அணி அபார வெற்றி
x

கோத்தகிரியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நீலகிரி (எல்லோ) அணி 7 கோல்கள் போட்டு தேனி மாவட்ட அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

நீலகிரி

கோத்தகிரி


கோத்தகிரியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நீலகிரி அணி 7 கோல்கள் போட்டு தேனி மாவட்ட அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

கால்பந்து போட்டி

நீலகிரி மாவட்ட கால்பந்தாட்ட கழகம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, நீலகிரி கால்பந்து கழகத்தின் சார்பில் நடத்தப்படும் மாநில அளவிலான பொன்விழா கால்பந்து போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் தொடங்கியது.

நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில் தமிழ்நாடு கால்பந்து கழகத்தில் பதிவு செய்துள்ள நீலகிரி, தேனி, திருவள்ளூர், திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, ஈரோடு, திண்டுக்கல், சென்னை, கோவை, சேலம், வேலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட கால்பந்து கழகங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

நீலகிரி அணி வெற்றி

இதையடுத்து நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நீலகிரி (எல்லோ) மற்றும் தேனி மாவட்ட அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் ஆட்டம் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய நீலகிரி (எல்லோ) அணி 7-0 என்ற கோல்கள் கணக்கில் தேனி மாவட்ட அணியைத் தோற்கடித்து முதல் வெற்றியைப் பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது.

தொடர்ந்து நடந்த 2-வது போட்டியில் ஈரோடு மற்றும் திருநெல்வேலி மாவட்ட அணிகள் விளையாடின. இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடியதால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இதில் ஈரோடு அணி ஒரு கோல் போட்டு வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. திருநெல்வேலி அணியால் கோல் எதுவும் போட முடியவில்லை. எனவே தோல்வியடைந்த தேனி மற்றும் திருநெல்வேலி அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின.


Next Story