கோவில் விழாவில் 90 ஆண்டுகளாக நடைபெறும் அரிச்சந்திரா நாடகம்


கோவில் விழாவில் 90 ஆண்டுகளாக நடைபெறும் அரிச்சந்திரா நாடகம்
x

தஞ்சை அருகே கோவில் விழாவில் ஆடல், பாடலுக்கு நிகழ்ச்சி நடத்தாமல் 90 ஆண்டுகளாக பழமை மாறாமல் அரிச்சந்திரா நாடகம் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை அருகே கோவில் விழாவில் ஆடல், பாடலுக்கு நிகழ்ச்சி நடத்தாமல் 90 ஆண்டுகளாக பழமை மாறாமல் அரிச்சந்திரா நாடகம் நடைபெற்று வருகிறது.

கோவில் விழாக்கள்

கோவில் விழாக்கள் என்றால் ஆடல் பாடல், வில்லுப்பாட்டு, இன்னிச்சை கச்சேரி, பக்தி சொற்பொழிவு, கரகாட்டம், மேளம் போன்றவை நடத்தப்படுவது வழக்கம். கிராமப்புறங்களில் இன்றளவும் இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது நகர்ப்புறங்களில் கோவில் விழாக்களில் பெரும்பாலும் இன்னிச்சை கச்சேரி நடத்தப்படுகிறது.ஆனால் தஞ்சை மாநகரில் ஒரு கோவில் விழாவில் இன்றும் பழமை மாறாமல் 90 ஆண்டுளாக மேளம், தப்பாட்டம், கரகாட்டம் மற்றும் அரிச்சந்திர நாடகம் போன்றவை மட்டுமே நடத்தப்படுகின்றன. இது பற்றிய விவரம் வருமாறு:-

உக்கிரகாளியம்மன் கோவில்

தஞ்சை 13-வதுவார்டில் உள்ளது டவுன்கரம்பை மூப்பனார் தெரு. இங்கு வல்லபை விநாயகர் மற்றும் உக்கிரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டப்பட்டு 90 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் 5 நாட்கள் திருவிழா நடத்தப்படும்.அதன்படி முதல் நாள் கேடயத்தில் சாமி வீதிஉலா, 2-வது நாள் சப்பரத்தில் சாமி வீதிஉலா, 3-வது நாள் தேரோட்டமும், 4-வது நாள் கிடாவெட்டு, 5-வது நாள் விளையாற்றி விழா மற்றும் சாமி வீதி உலாவும் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 3 நாட்கள் நடைபெறும் விழாக்களில் கரகாட்டம், மேளம், தப்பாட்டம் போன்றவை நடைபெற்றது. 4 மற்றும் 5-வது நாள் அரிச்சந்திரா நாடகம் 2 பகுதிகளாக நடத்தப்பட்டு வருகிறது.

90 ஆண்டுகளாக நாடகம்

90 ஆண்டுகளாக இதே முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் 5 நாட்கள் நடந்த விழாவில் கடைசி நாட்கள் அரிச்சந்திரா நாடகம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து நாடக கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு நடத்தப்பட்டது. முதல் நாளில் அரிச்சந்திரா நாடகத்தின் ஒரு பகுதியும், மறுநாள் அரிச்சந்திரா நாடகத்தின் மயான காண்டம் பகுதியும் இடம் பெற்றன.இந்தநாடகம் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 6 மணி வரை விடிய, விடிய நடைபெற்றது. இதனை பொதுமக்களும் கண்டுகளித்தனர். 90 ஆண்டுகளாக இந்த நாடகம் நடத்தப்பட்டு வந்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து நாடகத்தை கண்டுகளித்து வருகின்றனர். தெருவாசிகள் ஒத்துழைப்போடு கிராம நாட்டாண்மைகள் ஆண்டு தோறும் இந்த விழாவை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.


Next Story