குன்னூரில் பூத்த நிஷாகந்தி மலர்கள்
குன்னூரில் நிஷாகந்தி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
நீலகிரி
குன்னூர்
பிரம்ம கமலம் என்று அழைக்கப்படும் நிஷாகந்தி மலர்கள் ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் இரவில் பூத்து குலுங்கும். இந்த மலர்கள் வெள்ளை நிறத்தில் பூக்கும். இதன் இதழ்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது குன்னூர் பகுதியில் உள்ள சில வீடுகளில் நிஷாகந்தி மலர்கள் பூத்து உள்ளன. குன்னூர் அருகே வெலிங்டன் சின்ன வண்டிச்சோலை, ஆப்பிள் பீ, ஸ்டேன்லி பார்க், ஜெகதளா ஒசட்டி உள்பட பல்வேறு இடங்களில் வீட்டில் வளர்க்கும் இந்த செடிகளில் நிஷாகந்தி மலர்கள் பூத்தன. ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடியது என்பதால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மலர்களை புகைப்படம், வீடியோ எடுத்து சென்றனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story