என்.எல்.சி. அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம்
விழிப்புணர்வு வாரவிழா மேற்கொள்வது குறித்து என்.எல்.சி. அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெய்வேலி,
அனைத்து அரசு அமைப்புகளும் வருகிற நவம்பர் 15-ந் தேதி வரை 3 மாத காலம் கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய விழிப்புணர்வு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக என்.எல்.சி. நிறுவனத்தின் அனைத்து செயல் இயக்குனர்கள், தலைமை பொது மேலாளர்கள் மற்றும் என்.எல்.சி. நிறுவனத்தின் பிரிவு தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் என்.எல்.சி. நிறுவனத்தின் கண்காணிப்பு அலுவலகத்தில் உள்ள மணற்கேணி மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு முதன்மை காண்காணிப்பு விழிப்புணர்வு அதிகாரி பிரஜேஷ் குமார் திரிபாதி தலைமை தாங்கினார். தலைமை பொது மேலாளர் அசோக் தத்தாத்ரேயா கியோட்டே வரவேற்றார்.
கூட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்தின் வெளித்திட்டங்களின் பிரிவு தலைவர்கள் இணையதளம் மூலமாக பங்கேற்றனர். பி.ஐ.டி.பி.ஐ.யில் புகார்களை அளிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து பி.கே. திரிபாதி வலியுறுத்தினார். கையேடுகளை புதுப்பித்தல், விழிப்புப்பணி அலுவலர்கள் அளிக்கும் முறையான மேம்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் திறன் வளர்ப்பு மூலம் திறன் மற்றும் திறன் பயிற்சி நிர்வாகிகளுக்கு அளித்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். முடிவில் தலைமை பொது மேலாளார் ஏ.இரணியன் நன்றி கூறினார்.