என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 67-வது உதய தின விழா
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 67-வது உதய தின விழா நடைபெற்றது.
நெய்வேலி,
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில், கடந்த 1957-ம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு சுரங்க பணிகளை தொடங்கி வைத்தார். இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நிறுவன உதய தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் என்.எல்.சி. நிறுவனத்தின் 67-வது உதயதின விழா, முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி என்.எல்.சி.யின் அனைத்து அலுவலகங்கள் மற்றும் தொழிலகங்களிலும் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் கொடி ஏற்றப்பட்டு, நிறுவன கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நெய்வேலி நகரியத்தின் நுழைவு பகுதியில் ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட எழில் மிகு நுழைவு வாயிலை என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி திறந்து வைத்தார். பின்னர் மாலையில், லிக்னைட் அரங்கில் நடைபெற்ற விழாவில், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் கொடியை ஏற்றி வைத்த அவர் ஓய்வுபெற்ற என்.எல்.சி. ஊழியர்களை கவுரவித்து, சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு விருது மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார்.
விழாவில், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் மோகன் ரெட்டி, சுரேஷ் சந்திர சுமன், சமீர் ஸ்வரூப், வெங்கடாச்சலம், முன்னாள் தலைவர்கள் எம்.பி.நாராயணன், ஏ.கே.சகாய், எஸ்.ஜெயராமன், ஜெ.என்.பிரசன்ன குமாா், சுரேந்திர மோகன், ஆச்சார்யா; இயக்குனர்கள் பாபுராவ், ரவீந்திரநாத், ஆர்.என்.சிங், சேதுராமன், மகிழ்செல்வன், ராஜகோபால், மேத்தா, கந்தசாமி, பிரபாகா் சவுகி, சுபீர் தாஸ், செல்வகுமார், விக்ரமன், பூபதி, தங்கபாண்டியன், ஷாஜி ஜான், என்.என்.எம்.ராவ், முன்னாள் கண்காணிப்பு துறை தலைமை அதிகாரி வெங்கட சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.