என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்


என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் 2-வது நாளாக என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடந்தது.

கடலூர்

நெய்வேலி:

நெய்வேலியில் என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. இந்த சங்கத்தின் பேராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.

நெய்வேலி 1-வது வட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் வாயில் முன்பு அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story