போலீஸ் நிலையத்தில் நடவடிக்கை இல்லை:பாதிக்கப்பட்ட 2 பேர் சூப்பிரண்டிடம் புகார்


போலீஸ் நிலையத்தில் நடவடிக்கை இல்லை:பாதிக்கப்பட்ட 2 பேர் சூப்பிரண்டிடம் புகார்
x
தினத்தந்தி 21 Sept 2023 12:15 AM IST (Updated: 21 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட 2 பேர் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்ட 2 பேர் நேற்று போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

குறைதீர்க்கும் கூட்டம்

தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 2 பேர் அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். அந்த புகார் மீது சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த 2 பேரும் போலீஸ் சூப்பிரண்டிடம் மீண்டும் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

மேலும், புதிதாக பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட 47 பேரும் மனு கொடுத்தனர். இந்த வகையில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 49 பேர் புகார் மனு கொடுத்தனர். இதில் முதியோர், மாற்றுத்திறனாளிகளும் மனு கொடுக்க வந்து இருந்தனர். அவர்களால் குறைதீர்க்கும் முகாம் நடந்த மேல்தளத்துக்கு வரமுடியாமல் சிரமப்பட்டனர். இதை அறிந்த போலீஸ் சூப்பிரண்டு தரைதளத்துக்கு சென்று அவர்களிடம் நேரடியாக புகார் மனுக்களை வாங்கினார். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story