வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை
பர்லியார் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
நீலகிரி
குன்னூர்,
குன்னூர் அருகே பர்லியார் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு பர்லியார் ஊராட்சி தலைவர் சுசிலா தலைமை தாங்கினார். துணை தலைவர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பர்லியார் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. டால்பின் நோஸ் பகுதியில் வாகன நிறுத்த டெண்டர் நிறைவடைந்த நிலையில் தன்னிச்சையாக ஆட்களை நியமித்து வசூல் செய்வதாக பொதுமக்கள் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story