பெரியார் கொள்கையின்றி யாரும் ஆட்சி நடத்த முடியாது :கி.வீரமணி பேச்சு
பெரியார் கொள்கையின்றி யாரும் ஆட்சி நடத்த முடியாது என்று கி.வீரமணி பேசினார்.
தந்தை பெரியார் நினைவு நாள், ஜனநாயக முற்போக்கு கொள்கை விளக்க திறந்த வெளி மாநாடு, கம்பம் பூங்கா திடலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினர் சனார்த்தனன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் வரவேற்றார். ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-
பெரியார் பிறந்த நாளன்று கம்பத்தில் ஏற்பட்ட சலசலப்பின் எதிரொலியாகத்தான் இந்த திறந்த வெளி மாநாடு. பெரியார் இட ஒதுக்கீட்டை கொண்டு வரவேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் போராடினார். அவரது கொள்கைகளின்றி மத்தியிலும், மாநிலத்திலும் யாரும் ஆட்சி நடத்த முடியாது. ஈட்டி எறியும் வரை பாயும், பணம் பாதாளம் வரை பாயும். ஆனால் பெரியாரியம் அண்ட சராசரங்கள் வரை பாயும் என்றார். முடிவில் குமுளி மலைப்பாதை விபத்தில் உயிரிழந்த அய்யப்ப பக்தர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.மாநாட்டில் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கதமிழ்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.