பாடகர் விஜய் ஜேசுதாஸ் வீட்டில் ரூ.60 லட்சம் கொள்ளை போன வழக்கில் முன்னேற்றம் இல்லை - அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போலீசார் தீவிர ஆலோசனை


பாடகர் விஜய் ஜேசுதாஸ் வீட்டில் ரூ.60 லட்சம் கொள்ளை போன வழக்கில் முன்னேற்றம் இல்லை - அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போலீசார் தீவிர ஆலோசனை
x

பிரபல சினிமா பின்னணி பாடகர் விஜய் ஜேசுதால் வீட்டில் லாக்கரில் வைத்திருந்த ரூ.60 லட்சம் தங்கம்-வைர நகைகள் கொள்ளை போன வழக்கில் முன்னேற்றம் இல்லை. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போலீசார் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.

சென்னை

பிரபல சினிமா பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாசின் மகன் விஜய் ஜேசுதாஸ். இவரும் தமிழ், மலையாளம் உள்ளிட்ட படங்களில் பின்னணி பாடி புகழ் பெற்றவர். படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் தனுசுடன் மாரி படத்தில் நடித்துள்ளார். விஜய் ஜேசுதாஸ் சென்னை அபிராமபுரம், 3-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் வசிக்கிறார்.

அவரது மனைவி தர்ஷனா, சென்னை அபிராமபுரம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் கொடுத்த புகார் மனுவில், வீட்டில் உள்ள நம்பர் பாதுகாப்பு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க-வைர நகைகள் காணாமல் போய் விட்டதாகவும், கண்டுபிடித்து தரும்படியும் தெரிவித்தார். இதுதொடர்பாக அபிராமபுரம் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர். கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர் மேற்பார்வையில், கோட்டூர்புரம் உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

நகைகளை வீட்டில் வேலை பார்த்த வேலைக்காரர்கள் கை வைத்திருக்கலாம், என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் வேலைக்காரர்கள் யாருக்கும் தொடர்பு இல்லை என்று தெரியவந்தது. ஆனாலும் வழக்கை முடிக்காமல், வேறு பல கோணத்தில் விசாரித்தனர். இருந்தாலும் குற்றவாளிகள் பற்றி எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. இதனால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம், என்று போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். கண்டு பிடிக்க முடியாத வழக்காக கோர்ட்டில் அறிவித்து விட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.


Next Story