மழைக்காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழகத்தில் திட்டம் ஏற்படுத்தப்படவில்லை - மதுரை ஐகோர்ட்டு


மழைக்காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழகத்தில் திட்டம் ஏற்படுத்தப்படவில்லை - மதுரை ஐகோர்ட்டு
x

தண்ணீரை சேமிக்க தமிழ்நாட்டில் எந்த திட்டமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மதுரை,

விவசாய பாசனத்திற்கு தாமிரபரணி ஆற்றின் முக்கிய கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை வந்தது.அப்போது, மழை காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழ்நாட்டில் எந்த திட்டமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும், "தமிழகத்தில் உள்ள கண்மாய்களை முறையாக தூர்வாரி இருந்தால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் இருந்திருக்காது" என்றனர். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் சேர்க்க உத்தரவிட்ட வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story