ெநாய்யல் ஆற்றங்கரையோரம் சமூக நல்லிணக்க ெபாங்கல் வைத்த பெண்கள்


ெநாய்யல் ஆற்றங்கரையோரம் சமூக நல்லிணக்க ெபாங்கல் வைத்த பெண்கள்
x

ெநாய்யல் ஆற்றங்கரையோரம் சமூக நல்லிணக்க ெபாங்கல் வைத்த பெண்கள்

திருப்பூர்

திருப்பூர்,

பொங்கலையொட்டி விழாக்கோலம் பூண்ட திருப்பூர் மாநகரத்தில் நொய்யல் ஆற்றங்கரையோரம் பெண்கள் சமூக நல்லிணக்க பொங்கல் வைத்தனர். இதில் பெருஞ்சலங்கையாட்டத்துடன் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடந்தது.

பொங்கல் திருவிழா

திருப்பூர் மாநகராட்சி நொய்யல் பண்பாட்டு அமைப்பு, ஜீவநதி நொய்யல் சங்கம் ஆகியவை சார்பில் திருப்பூர் பொங்கல் திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை மங்கல இசையுடன் விழா தொடங்கியது. விழாவிற்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். நிட்மா மற்றும் ஜீவநதி நொய்யல் சங்க தலைவர் அகில் ரத்தினசாமி வரவேற்றார். திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கலந்துகொண்டனர். அதை தொடர்ந்து மாநகராட்சி 60 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுக்கும் 50 குடும்பங்கள் என இணைந்து 3 ஆயிரம் குடும்பங்கள் சீருடையில் புத்தாடை அணிந்து நொய்யல் ஆற்றங்கரையோரம் சமூக நல்லிணக்க பொங்கல் வைத்தனர். பின்னர் பெண்கள் குழுவாக சேர்ந்து கும்மியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

புதிய சாலைகள் திறப்பு

அதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புதிய சாலை திறப்பு விழா நடந்தது. திருப்பூர் மாநகரின் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண தூரத்தை குறைக்கும் வகையிலும், ஈஸ்வரன் கோவில் பாலத்தின் நொய்யல் ஆற்றின் தென்கரை பகுதியின் வழியாக முதலிபாளையம் டெக்கிக் தொழிற்பேட்டை மற்றும் நிப்ட் டீ கல்லூரிக்கு பயணிப்பதற்கு ஏதுவாகவும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டினை நினைவு கூறும் வகையிலும் 'நமக்கு நாமே திட்டத்தின்'கீழ் ரூ.1.47 கோடி செலவில் ஈஸ்வரன் கோவில் பாலம் முதல் மணியக்காரம்பாளையம் பாலம் வரை தார்ச்சாலை 'டீ வெள்ளிவிழா சாலை' திறக்கப்பட்டது. இந்த சாலைைய செல்வராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். பியோ தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். டீ தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் வரவேற்றார்.

விழாவில் திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம், டீ துணை தலைவர்கள் ராஜ்குமார் ராமசாமி, இளங்கோவன், இணை செயலாளர் சின்னசாமி, பொருளாளர் கோபாலகிருஷ்ணன், ஜீவநதி நொய்யல் சங்க செயலாளர் சண்முகராஜ், பொருளாளர் சீமென்ஸ் ஆர்.ராஜாமணி, டீ இணை செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் டீ பொதுச்செயலாளர் திருக்குமரன் நன்றி கூறினார்.

அதேபோல் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சார்பில் வெள்ளிவிழா சாலை உள்ளிட்ட சாலைகளை திறந்து வைக்கப்பட்டது.. இதில் சாய ஆலை உரிமையாளர் தலைவர் காந்திராஜன், செயலாளர் முருகசாமி, சங்க நிர்வாகிகள், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கொங்கு பண்பாட்டு மைய தலைவர் எஸ்.ஆர்.குமார், விகாஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், தி.மு.க. பகுதி செயலாளர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கலை நிகழ்ச்சிகள்

பின்னர் மாலையில் வள்ளி கும்மி ஆட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம், செந்தமிழ் காவடி ஆட்டம், ஒயிலாட்டம், கொங்கு பண்பாட்டு மையம் குழுவினரின் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை நேரத்தில் தேன்மொழி முரளி வழங்கும் விகடகவி கலைக்குழுவினரின் கிராமிய நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியை காண திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.



Next Story