சந்தா தொகை செலுத்தாத கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்துக்கு சீல்


சந்தா தொகை செலுத்தாத கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்துக்கு சீல்
x

காளசமுத்திரம் கிராமத்தில் சந்தா தொகை செலுத்தாத கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே சந்தவாசல் உள்வட்டத்திற்கு உட்பட்ட காளசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு சந்தா தொகை ரூ.49 ஆயிரத்து 696-ஐ நிலுவையில் வைத்துள்ளார்.

இதனை செலுத்த கூறி பலமுறை தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் அவர் செலுத்தவில்லை.

இந்த நிலையில் இன்று போளூர் தாசில்தார் சண்முகம், மண்டல துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி, சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் உதயகுமார், காளசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயகுமார்,

சந்தவாசல் கிராம நிர்வாக அலுவலர் ரேணு, கிராம நிர்வாக அலுவலர் சம்பத், கல்பட்டு கிராம நிர்வாக அலுவலர் நித்தியானந்தம், அனந்தபுரம் கிராம நிர்வாக அலுவலர் மயிலரசன் மற்றும் கிராம உதவியாளர் வின்சன்ட் ஆகியோர் முன்னிலையில் நடராஜனின் கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.


Next Story