வடமாடு எருதுகட்டு விழா


வடமாடு எருதுகட்டு விழா
x

முதுகுளத்தூர் அருகே வடமாடு எருதுகட்டு விழா நடைபெற்றது.

ராமநாதபுரம்


முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே வடமாடு எருதுகட்டு விழா நடைபெற்றது.

வடமாடு எருதுகட்டு விழா

முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வடமாடு எருதுகட்டு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழாவையொட்டி வடமாடு எருதுகட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்க மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 21 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. அதேபோல மேல தூவல் கிராமத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

பரிசு பொருட்கள்

விழாவையொட்டி முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து மைதானத்தில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்து சென்றன. அவ்வாறு சென்ற காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் பிடிபடாமல் தப்பி சென்றது.

மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் ரொக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் கிராமத்தின் சார்பாக வழங்கப்பட்டது. .Next Story