நத்தம் அருகே வடமாநில தொழிலாளி திடீர் சாவு


நத்தம் அருகே வடமாநில தொழிலாளி திடீர் சாவு
x

நத்தம் அருகே வடமாநில தொழிலாளி மயங்கி விழுந்து இறந்துபோனார்.

திண்டுக்கல்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முன்னா யாதவ் (வயது 30). இவர் நத்தம் அருகே, நத்தம்-மதுரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் இன்று வேலை செய்து கொண்டிருந்த முன்னா யாதவ் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முன்னா யாதவ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்னா யாதவ் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story