வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வடமாநில வாலிபர் சாவு
வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வடமாநில வாலிபர் இறந்தார்.
திண்டுக்கல்
ஒடிசா கஜபதி மாவட்டம் குடிசை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் லபோதளபதி (வயது 30). இவர், வேடசந்தூர் அருகே கிரியம்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி லபோதளபதி அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன்குமார் (30) என்பவர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தார்.
அப்போது பிரவீன்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக லபோதளபதி மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த லபோதளபதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சை்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story