மர்ம காய்ச்சலுக்கு வடமாநில தொழிலாளி பலி
மர்ம காய்ச்சலுக்கு வடமாநில தொழிலாளி இறந்தார்
திருநெல்வேலி
நெல்லை புதிய பஸ் நிலைய வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாகன காப்பகம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிட பணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கமல் (வயது 23) என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்ததால் கமலை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். கமல் மர்ம காய்ச்சலால் இறந்தது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story