பெருந்துறை சிப்காட்டில் வடமாநில தொழிலாளி தற்கொலை


பெருந்துறை சிப்காட்டில் வடமாநில தொழிலாளி தற்கொலை
x

பெருந்துறை சிப்காட்டில் வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு

சென்னிமலை

ஒடிசா மாநிலம் உரியா மாவட்டத்தை சேர்ந்தவர் சுசில் காண்டி (வயது 18). இவர் இதே மாநிலத்தை சேர்ந்த தனது நண்பர்களுடன் பெருந்துறை சிப்காட் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். சுசில் காண்டி தனது சொந்த ஊரில் வீடு கட்டி வந்துள்ளார். இதற்கு போதுமான பணம் இல்லாததால் தனது நண்பர்களிடம் இது பற்றி கூறி அடிக்கடி வருத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மனமுடைந்த சுசில் காண்டி நேற்று காலையில் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனம் அருகில் இருந்த வேப்ப மரத்தில் துணியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுசில் காண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story