10 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது
ஓடும் ரெயிலில் 10 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது ஹத்தியாவிலிருந்து யஸ்வந்த்பூர் செல்லும் ரெயிலில் சந்தேகத்திற்கிடமான வகையில் பையுடன் இருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.
சோதனையில் 10 கிலோ 800 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலம் பத்ரா மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 22) என்பது தெரிய வந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து பெங்களூருக்கு கஞ்சாவை கடத்திச் சென்று விற்பனை செய்ய இருந்ததாக பிடிப்பட்ட வாலிபர் தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வைத்திருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.