விநாயகர் சிலை ஊர்வலம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு


விநாயகர் சிலை ஊர்வலம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு
x

வாணியம்பாடியில் விநாயகர் சிலை ஊர்வலம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் விநாயகர் சிலை ஊர்வலம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி நேரில் ஆய்வு செய்தார்.

வடக்குமண்டல ஐ.ஜி. ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, திம்மாம் பேட்டை, அம்பலூர், உதயேந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து நேற்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

இந்த சிலைகள் அனைத்தும் நாளை (வெள்ளிக்கிழமை) கரைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று வாணியம்பாடிக்கு வந்த வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி, வாணியம்பாடியில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் இடங்களையும், விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லும் சாலையான திருவள்ளுவர் வீதி, ஆம்பூர் பேட்டை, காதர் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

போலீஸ் நிலையம்

அதைத்தொடர்ந்து வாணியம்பாடி டவுன் மற்றும் தாலுகா போலீஸ் நிலைய பணிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், அருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நியூடவுன், பொன்னியம்மன் கோவில், உதயேந்திரம், சி.எல்.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.


Next Story