வரும் 25 ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
வரும் 25 ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்மேற்கு பருவ மழை படிப்படியாக விலக தொடங்கியிருக்கும் நிலையில், தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, வடகிழக்கு பருவமழை வரும் 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சராசரியாக அக்டோபரில் 177.2 மி. மீ. மழையும் நவம்பரில் 178.8 மி.மீ , டிசம்பரில் 92 மி.மீ. மழையும் பெய்வது இயல்பானதாகும். வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 448 மி.மீட்டர் மழை பெய்யும் என்பது கவனிக்கத்தக்கது.
Related Tags :
Next Story