திருச்செந்தூர் அருகே வடமாநிலஐஸ்வியாபாரி கொலை வழக்கில் தொழிலாளி கைது
திருச்செந்தூர் அருகே வடமாநில ஐஸ்வியாபாரி கொலை வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே வடமாநில ஐஸ் வியாபாரி கொலை வழக்கில், தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
வடமாநில ெதாழிலாளி
ராஜஸ்தான் மாநிலம் கிராமல்கேடா பீதாஸ் பில்வாரா பகுதியை சேர்ந்த வினோத் தாரோகா (வயது 29). இவர் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம் ராஜ்கண்ணா நகரில் தங்கியிருந்து ஐஸ் வியாபாரம் செய்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டின் மொட்டை மாடியில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, வினோத் அம்மிக் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் திடுக் தகவல்
இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், வினோத்தை கொலை செய்தது, வீட்டின் அருகே குடியிருந்து வரும் அவரது நண்பர் கந்தசாமி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கந்தசாமியை போலீசார் தீவிரமாக தேடினர். இதை அறிந்த அவர் பஸ் மூலம் வெளியூரு்கு தப்பி செல்வது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் கந்தசாமி குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் எட்டையாபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தொழிலாளி கைது
அந்த வழியாக பஸ்ஸில் தப்பி சென்று கொண்டிருந்த கந்தசாமியை பிடித்தனர். பின்னர் அவரை திருச்செந்தூர் போலீசாரிடம் தனிப்படையில் ஒப்படைத்தனர்.
அவரை கைது செய்த திருச்செந்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், வீரபாண்டியன்பட்டினம் ராஜ்கண்ணா நகரில் வீட்டின் அருகில் குடியிருந்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த ஐஸ் வியாபாரி வினோத்தும், கந்தசாமியும் நெருங்கி பழகி வந்துள்ளனர். கடந்த 18-ந் தேதி இரவு இருவரும் வினோத் தங்கியுள்ள வீட்டின் மாடியில் மது குடித்துள்ளனர். அப்போது வினோத்திற்கும், கந்தசாமி மனைவிக்கும் இடையே அன்று பகலில் நடந்த குடிநீர் பிரச்சினை தொடர்பான வாக்குவாதம் குறித்து பேசியுள்ளனர். இதில் அவரின் நடத்தையில் சந்தேகம் இப்பதாகவும், நான் கூப்பிட்டால் கூட என்னுடன் வந்து விடுவாள் என வினோத் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கந்தசாமி அருகில் இருந்த கல்லால் முதலில் வினோத்தை அடித்துள்ளார். பின்னர் அம்மிக்கல்லால் தலையில் தாக்கியுள்ளார். இதில் வினோத் சம்ப இடத்தில் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.