கோடை நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள்


கோடை நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள்
x

ஆள்பற்றாகுறை மற்றும் கூலி உயர்வு காரணமாக கோடை நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்

மெலட்டூர்:

ஆள்பற்றாகுறை மற்றும் கூலி உயர்வு காரணமாக கோடை நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாற்று நடும் பணி

பாபநாசம் தாலுகா இரும்புதலை, கோவத்தகுடி, களஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தற்போது கோடை நடவு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆள்பற்றாகுறை மற்றும் கூலி உயர்வு காரணமாக இந்த பகுதியில் நாற்று நடும் பணி உள்பட விவசாய பணிக்காக மேற்கு வங்காளம் மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கோவத்தகுடி பகுதியில் தங்கியிருந்து கடந்த 10 நாட்களாக நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆள் பற்றாகுறை-கூலி உயர்வு

இதுகுறித்து உள்ளூர் விவசாயிகள் கூறியதாவது:-

இரும்புதலை மற்றும் சாலியமங்களம், களஞ்சேரி, பள்ளியூர் பகுதியில் தற்போது கோடை நடவு நடும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் பகுதியில் ஆள் பற்றாகுறை மற்றும் கூலி உயர்வு ஆகியவை காரணமாக நாற்று நடும்பணி உள்பட விவசாய பணிக்கு மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு விவசாயிகள் கோடை விவசாய பணிகளை செய்து வருகின்றனர்.

பெரும்பாலும் குறுவை, சம்பா விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாகுறை ஏற்படும் காலங்களில் மட்டும் வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு விவசாய பணிகளை செய்து முடிப்போம். தற்போது கோடை சாகுபடிக்கே கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அதனால் வடமாநில தொழிலாளர்களை வரவழைத்து விவசாய பணிகளை முடிக்க வேண்டி நிலை உள்ளது என்றனர்.


Next Story