ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் பலி
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் பலியானார்.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை
ஒடிசா மாநிலம் மோனிகடா பகுதியை சேர்ந்தவர் கத்ரி நாயக். இவரது மகன் காலூர் சரண் நாயக் (வயது 36). இவர் வேலைதேடி நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு ரெயிலில் பயணம் செய்தார். நேற்று மதியம் கேத்தாண்டப்பட்டி- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது படிக்கட்டில் பயணம் செய்த காலூர் சரண் நாயக், ரெயிலில் இருந்து தவறி விழுந்து அடிபட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து பிண த்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story