பொய்கை சந்தைக்கு ஒரு மாடுகூட விற்பனைக்கு வரவில்லை


பொய்கை சந்தைக்கு ஒரு மாடுகூட விற்பனைக்கு வரவில்லை
x

காணும் பொங்கலை முன்னிட்டு பொய்கை சந்தைக்கு ஒரு மாடுகூட விற்பனைக்கு வரவில்லை. கோழிகள் மட்டும் ரூ.10 லட்சத்துக்கு விற்பனையானது.

வேலூர்

அணைக்கட்டு

அணைக்கட்டு அடுத்த பொய்கை ஊராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். பொங்கல் வருவதற்கு முன்பே செவ்வாய்க்கிழமை அன்று ரூ.3 கோடிக்கு மேல் மாட்டுச்சந்தையில் வியாபாரம் நடைபெற்றது.

போகி பண்டிகையை முன்னிட்டும் வாரச்சந்தை நடந்தது. அப்போது குறைந்த அளவே மாடுகள் வந்ததாகவும், கோழிகள் மற்றும் காய்கறிகள் விற்பனை அதிகமாக இருந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

காணும் பொங்கலை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை சந்தைக்கு ஒரு மாடுகள் கூட வரவில்லை. இதனால் சந்தை கூடும் இடம் வெறிச்சோடி கிடந்தது.

ஆனால் அதே சமயத்தில் ஆயிரக்கணக்கான நாட்டுக்கோழிகள், லிங்காபுரம் கோழிகள் உள்ளிட்ட பல வகையான கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

பொதுமக்கள் போட்டி போட்டு கோழிகளை வாங்கிச் சென்றனர். ஒரு கோழியின் விலை ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதனால் இந்த வாரம் நடந்த சந்தையில் ரூ.10 லட்சத்துக்கு மேல் கோழிகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது.


Next Story