பராமரிக்கப்படாத கூடைபந்து மைதானம்
பராமரிக்கப்படாத கூடைபந்து மைதானம்
உடுமலை
உடுமலை ராஜேந்திரா சாலையில் சுமார் 70ஆண்டுகளுக்கும் மேலான பள்ளி உள்ளது. அரசு உயர்நிலைப்பள்ளியாக இருந்த இந்த பள்ளி சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளி வளாகத்தில் உடுமலை மாவட்ட கல்வி அலுவலகமும் செயல்பட்டுவருகிறது. அத்துடன் இந்த பள்ளி வளாகத்தின் ஒருபகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இவை மூன்றும் ஒரே வளாகத்தில் அடுத்தடுத்து உள்ளன. மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டிடத்தின் பின்பகுதியில் காலியிடம் உள்ளது. இந்த காலியிடத்தில் கூடைபந்து விளையாட்டு மைதானம் உள்ளது.இந்த மைதானத்தில் கான்கிரீட் தளம் நன்றாக உள்ளது.அதேசமயம் பந்தைபோடும் போர்டு மற்றும் பந்து போடும் கூடைபகுதி உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த மைதானத்தில் முன்பு மாநில அளவிலான கூடைபந்து போட்டிகள் பகலிலும், இரவு நேரத்தில் மின்னொளியிலும் நடந்துள்ளன.ஆனால் இப்போது கூடைபந்து விளையாட்டு மைதானம் பராமரிப்பு இல்லாமல் காட்சி பொருளாகவே உள்ளது. இதில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று மாணவர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். மைதானத்தை சுற்றிலும் புல் செடிகள் வளர்ந்து புதராக உள்ளது.இந்த புல்செடிகள் காய்ந்தும் உள்ளன.அதனால் அந்த புல் செடிகளை அகற்றி சுத்தம்செய்து, இந்த மைதானம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
---