மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா


மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா
x

ஜோலார்பேட்டையில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

திருப்பத்தூர்

அமுதவள்ளி கல்வி அறக்கட்டளை நிறுவனம் மற்றும் சென்னை சேப்பாக்கம் தமிழ்நாடு விதவை மற்றும் ஆதரவற்ற சமூக பெண்கள் மேம்பாட்டு இயக்கம் சார்பில் 68 பள்ளிகளை சேர்ந்த ஏழை மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஜோலார்பேட்டையில் உள்ள தந்தை பெரியார் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சுபாஷினி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பிரேமா வரவேற்றார். அறக்கட்டளை தலைவர் அ.அமுதவள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சிகளை அலுவலக உதவியாளர்கள் சாந்தா மற்றும் பார்வதி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.


Next Story