மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்
திருப்பத்தூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர், சிவராஜ் பேட்டையை சேர்ந்த ஆசிரியர் பி.தாமோதரன் நினைவு நாளையொட்டி ஜானகி பொன்னுசாமி அரசு பள்ளி பள்ளி, அச்சமங்கலம் அரசினர் உயர்நிலைப்பள்ளி, வெங்காயப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் 600 மாணவ- மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் மதிய உணவாக பிரியாணி பழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி கவுன்சிலர் டாக்டர் மு.வெற்றிவெண்டான் தலைமை வகித்து, அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.சுபாஷ் சந்திரபோஸ், தொகுதி செயலாளர் தி.நா.கோவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் மதிய உணவு வழங்கி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story