நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நெல்லை:
நெல்லை கொக்கிரகுளம் துணை மின்நிலையம் மற்றும் கல்லிடைக்குறிச்சி மின்கோட்டத்திற்கு உட்பட்ட ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணை மின் நிலையங்களில் 4-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அங்கு இருந்து மின் வினியோகம் பெறும் நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை (முழுவதும்), இளங்கோ நகர், பரணி நகர், நெல்லை சந்திப்பு முதல் மேரி சார்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெரு மற்றும் சுப்பிரமணியபுரம்,
ஆழ்வான்துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், அம்பை, ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும்,
ஆவுடையானூர், மணல்காட்டானூர், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், சிவநாடானூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது.
இதேபோல் பாளையங்கோட்டை பெருமாள்புரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட புதிய பஸ்நிலைய மின்பாதையில் நாளை பிக்பஜார் அருகே சாலை விரிவாக்க பணியையொட்டி மின்பாதை மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது. அதன் காரணமாக புதிய பஸ்நிலையம், பிக்பஜார், சங்கராபுரம், கார்டன்தெரு, பயோனியர்குமாரசாமி நகர், எஸ்.டி.சி. 60 அடி மெயின்ரோடு, வெங்கடாத்தி நகர், பெருமாள்புரம் 1 முதல் 10-வது தெரு வரை, பெருமாள்புரம் ஏ காலனி, ஆம்னி பஸ்நிலையம், தாமஸ்தெரு, காவலர் குடியிருப்பு மற்றும் பெருமாள்புரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை, மின்வினியோக செயற்பொறியாளர்கள் ஷாஜகான் (நெல்லை நகர்ப்புறம்), சுடலையாடும் பெருமாள் (கல்லிடைக்குறிச்சி) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.