2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலாது என நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு


2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலாது என நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
x

திருவாரூரில் கூட்டுறவு பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலாது என நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூரில் கூட்டுறவு பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலாது என நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்

ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாகவும், செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தெரிந்ததும் பலர் வங்கி ஏ.டி.எம்., வங்கி மூலம் பணத்தை மாற்ற தொடங்கி விட்டனர்.நேற்று முன்தினம் முதல் வங்கிகள் மூலம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததால் அன்றைய தினம் காலை முதலே பொதுமக்கள் தங்களிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு வரத் தொடங்கினர்.

திணறல்

இந்தநிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவாரூரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் குவிந்து வருகிறார்கள். அவர்கள் ரூ.200-க்கு அல்லது ரூ.300-க்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுக்கிறார்கள். அவர்களுக்கு சில்லறை வழங்க முடியாமல் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் திணறி வருகிறார்கள்.

பெட்ரோல் நிலையத்தில் நோட்டிஸ்

இந்த நிலையில் திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சொந்தமான கூட்டுறவு பெட்ரோல்- டீசல் விற்பனை நிலையத்தில் நேற்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலாது என பெட்ரோல் நிலையம் முழுவதும் நோட்டிஸ் அடித்து ஒட்டப்பட்டிருக்கிறது. இதனால் பெட்ரோல், டீசல் நிரப்ப வருபவர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் பணத்தை வாங்க பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மறுக்கின்றனர்.இதனால் நேற்று அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொண்டு வந்தவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கி வரும் நிலையில் அரசுக்கு சொந்தமான கூட்டுறவு பெட்ரோல் நிலையத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Next Story