ஊட்டியில் சாலையை ஆக்கிரமித்த 150 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்
ஊட்டியில் சாலையை ஆக்கிரமித்த 150 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்
ஊட்டி
ஊட்டியில் விரைவில் கோடை சீசன் தொடங்குகிறது. இதையொட்டி மலர் கண்காட்சி நடைபெறும். இதற்கான தற்போதே பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஊட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துகள் நடந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் போலீசார், ஊட்டியில் சாலையோரமாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்து உள்ளவர்களுக்கு கடைகளை உடனடியாக அகற்றும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. தவறும்பட்சத்தில் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், மார்ச் மாதம் முதல் ஊட்டியில் சீசன் காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். மேலும் முக்கிய நபர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு கருதியும் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தவிர்க்க இந்த நோட்டீஸ் வழங்கபட்டு உள்ளது. என்றனர்.