தேனியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 31 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
தேனியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 31 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேனி
தேனி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கடந்த மாதம் 27, 28-ந் தேதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்தநிலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 31 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கலாவதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது ஆசிரியர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story