எம்.பில்., பிஎச்.டி. படிப்பு:தகுதி தேர்வுக்கான இணையதள பதிவு தேதி அறிவிப்பு-பல்கலைக்கழக பதிவாளர் தகவல்
எம்.பில்., பிஎச்.டி. படிப்பின் தகுதி தேர்வுக்கான இணையதள பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தகவல்
பேட்டை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துறைகளில் முதுநிலைப் பாடப்பிரிவில் முழுநேர ஆராய்ச்சிக்காக பதிவு செய்கின்ற தகுதிமிக்க ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை பெறும் வாய்ப்புகள் உண்டு.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப் பிரிவுகளில், இளம் முனைவர் (எம்.பில்), முனைவர் (பிஎச்.டி) பட்டப்படிப்பு பதிவுக்கான தகுதி தேர்விற்கான விண்ணப்பங்கள் (ஆன் லைன்) வரவேற்கப்படுகின்றன. முதுகலை இறுதிப்பருவத்தில் பயிலும் மாணவர்களும் தகுதித்தோவில் கலந்து கொள்ளலாம்.
ஆனால் முனைவர் பட்ட பதிவின் போதும் அவர்கள் முதுநிலையில் தேர்ச்சி பெற்று இறுதி மதிப்பெண் பட்டியலை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் முனைவர் பட்ட பதிவை இளம் முனைவர் பட்டம் கொண்டு பதிவு செய்ய விரும்புவர்கள், இளம்முனைவர் பட்டத்தில் தேர்ச்சி பெற்று இறுதி மதிப்பெண் பட்டியலை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பான பாடப்பிரிவுகள், அடிப்படை தகுதிகள், கட்டண விவரங்கள், தகுதித்தேர்வு தேதி மற்றும் அனுமதி நெறிமுறைகள் ஆகியன பல்கலைக்கழக இணையதளத்தில்கொடுக்கப்பட்டுள்ளது. (இணையதள முகவரி: http://www.msuniv.ac.in).
NET/SET/JRF/GATE தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்தத் தகுதி தேர்விலிருந்து விலக்களிக்கப்படுகிறது. தகுதித்தோவின் தேர்ச்சியானது ஒரு அமர்வுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இது குறிந்த விவரங்களை பல்கலைக்கழக இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகுதித் தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள், இப் பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள ஆராய்ச்சி பிரிவு பகுதியின் இணையதள விண்ணப்பம் (ஆன் லைன்) மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் இத்தகுதித்தேர்வுக்கான கட்டணத்தொகை ரூ.500 ஆகும்.
இணையதள விண்ணப்ப வாயில் திறக்கப்படும் நாள்-21.12.2022.
இணையதள விண்ணப்ப வாயில் மூடப்படும் நாள்-16.01.2023.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்-22.01.2023.
தேர்வு நடைபெறும் இடம் பல்கலைக்கழக வளாகம், அபிஷேகப்பட்டி, நெல்லை.
இந்த தகவலை பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.