மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு
தஞ்சை நகரில் இன்றும், நாளையும் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை நகரில் இன்றும், நாளையும் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்கம்பங்கள் மாற்றும் பணி
தஞ்சை நகரிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் அண்ணாநகர் மின்பாதையில் பழுதான மின்கம்பம் மாற்றும் பணி இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் முனியாண்டவர் காலனி, சித்ராநகர், நாஞ்சிக்கோட்டை சாலை உழவர் சந்தை, காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், பிலோமினா நகர், சாந்தி நகர், பரிசுத்தம் நகர், அருளானந்தம்மாள் நகர் போன்ற பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மின்வினியோகம் நிறுத்தம்
தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்தில்திலகர் திடல் மின்பாதையில் பழுதான மின்கம்பங்கள் மாற்றும் பணி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதனால் பெரியகோவில் எதிரில் உள்ள பகுதி, ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி மற்றும் தாசில்தார் அலுவலக பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மேலும் தென்றல் நகர், துளசியாபுரம், நடராஜபுரம் காலனி, முனிசிபல் காலனி, எழில்நகர், தமிழ்நகர், தேவன்நகர், பெரியார் நகர், இந்திராநகர், நடராஜபுரம் காலனி தெற்கு போன்ற பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மேலும் மின்தடை குறித்த விவரங்களுக்கு பொதுமக்கள் 9498794987 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.