மின்நிறுத்தம் செய்யும் தேதிகள் அறிவிப்பு
கலவை பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யும் தேதிகள் அறிவிப்பு
கலவை
வேலூர் மின்பகிர்மான வட்டம் மாம்பாக்கம் உபகோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் (கலவை தாலுகா) எதிர்வரும் பருவ மழை காலத்தின் காரணமாக மின் தடங்கள் ஏற்படாமல் இருக்க உயர்மின்பாதைகளில் ஆய்வு செய்து குறைபாடுகளை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே கீழ்கண்ட நாட்கள் மற்றும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்வினியோம் நிறுத்தப்படும்.
நாளை (சனிக்கிழமை) கலவைரோடு, மாம்பாக்கம், குப்பிடிச்சாத்தம், பென்னகர், தோனிமேடு, கோடாலி, பாலி, வேம்பி, அத்தியானம், வாழப்பந்தல், மேல்புதுப்பாக்கம், ஆயர்பாடி பகுதிகளிலும்,
வருகிற 5-ந் தேதி மாம்பாக்கம், ஆரூர், பொன்னம்பலம், தட்டச்சேரி, சிவபுரம், வல்லுவநத்தம், கண்ணிகாபுரம், மருதம், இருங்கூர், சொரையூர் ஆகிய பகுதிகளிலும்
12-ந் தேதி மேலப்பழந்தை, கொருக்காத்தூர் கூட்டு குடிநீர் திட்டம், ஆரணி ரோடு மாம்பாக்கம், பாரியமங்கலம், செங்கனாவரம், ஆயிரமங்கலம், பெருமாந்தாங்கல், ராந்தம் கொரட்டூர் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.