பூத்து குலுங்கும் நாவல் மரங்கள்
நத்தம் பகுதியில் நாவல் மரங்கள் பூத்து குலுங்குகின்றன.
நத்தம் பகுதியில் மா, பலா, வாழை, கொய்யா, சப்போட்டா, சீத்தா, பப்பாளி, இலந்தை, முந்திரி மற்றும் நாவல் பழங்கள் அதிகம் விளைகின்றன. இவை அந்தந்த சீசனுக்கு ஏற்றார்போல் விளைச்சல் தரும். இதில் பரளி, வத்திபட்டி, லிங்கவாடி, மலையூர், முளையூர், காசம்பட்டி, ரெட்டியபட்டி, கவரயபட்டி, சமுத்திராபட்டி, மணக்காட்டூர், திருமலைக்கேணி, ேகாபால்பட்டி, உலுப்பக்குடி, புன்னப்பட்டி, மூங்கில்பட்டி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நாவல் மர தோட்டங்களை வைத்து விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். இந்த நாவல் பழம் சர்க்கரை நோயாளிகள் விரும்பும் பழமாகவும் உள்ளது. தற்ேபாது நத்தம் பகுதியில் உள்ள தோட்டங்களில் நாட்டு நாவல் மரங்கள் ஏற்கனவே பெய்த பருவமழையால் அதிகமான பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதை தொடர்ந்து இந்த மாதம் கடைசியில் சீசன் தொடங்கும், அதிக மகசூல் கிடைக்கும் என்றும் விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.