நவம்பர் மாத விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.18.17 ஆக நிர்ணயம்


நவம்பர் மாத விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.18.17 ஆக நிர்ணயம்
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நவம்பர் மாத விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.18.17 ஆக நிர்ணயம்

நீலகிரி

குன்னூர்

பச்சை தேயிலைக்கு நவம்பர் மாத விலையாக கிலோவுக்கு 18 ரூபாய் 17 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேயிலை வாரிய செயல் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தேயிலை விவசாயம்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயமே பிரதானமாக இருந்து வருகிறது. இங்கு கார்பரேட் தேயிலை எஸ்டேட்டுகள் மட்டுமின்றி சிறு விவசாயிகளும் தேயிலை விவசாயத்தில் ஈடுட்டு வருகின்றனர். இதன்படி மாவட்டத்தில் 65 ஆயிரம் தேயிலை சிறு விவசாயிகள் உள்ளனர்.

தேயிலை சிறு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலைக்கு கட்டுபடியான விலை கிடைப்பது இல்லை என்றும் மத்திய அரசு பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதன்படி மத்திய அரசின் தேயிலை வாரியம் மூலம் மாந்தோறும் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய மாவட்டத்தில் விலை நிர்ணய குழு அமைக்கப்பட்டுள்ளது.

சராசரி விலை நிர்ணயம்

இந்த குழு மாதந்தோறும் பச்சை தேயிலைக்கு சராசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது. இதன்படி கடந்த நவம்பர் மாத மாவட்ட சராசரி விலையாக பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு 18 ரூபாய் 17 பைசா என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குனர் முத்துகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

2021-ம் ஆண்டின் தேயிலை (சந்தைப்படுத்துதல்) கட்டுபாட்டு ஆணையின்படி பச்சை தேயிலையின் மாவட்ட சராசரி விலை மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி கடந்த நவம்பர் மாத மாவட்ட சராசரி விலையாக பச்சை தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு 18 ரூபாய் 17 பைசா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற தேயிலை ஏலத்தில் வாங்கும் தேயிலை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்த சி.டி.சி. தேயிலை தூளின் விற்பனை விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டது ஆகும்.

உறுதி செய்ய வேண்டும்

இந்த சராசரி விலையை மாவட்டத்தில் உள்ள அனைத்து தேயிலை தொழிற்சாலைகள் சிறு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இந்த சராசரி விலையை அனைத்து வாங்கும் தேயிலை தொழிற்சாலைகளும் தேயிலை சிறு விவசாயிகளுக்கு வழங்குவதை தேயிலை வாரிய கள அதிகாரிகள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், தேயிலை வளர்ச்சி உதவி இயக்குனர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story