நொய்யல் ஆற்றில் பாய்ந்த புதுவெள்ளம்


நொய்யல் ஆற்றில் பாய்ந்த புதுவெள்ளம்
x
திருப்பூர்


கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 3 நாட்களாக திருப்பூர் மாநகரில் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நல்லம்மன் தடுப்பணை நிரம்பி வழிந்து நல்லம்மன் கோவிலை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தது. அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் அந்த வழியாக போக்குவரத்து தடைபட்டது. போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

மாநகரில் நொய்யல் ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி நேற்று வெள்ளம் பாய்ந்தது. ஈஸ்வரன் கோவில் நொய்யல் பாலத்தின் அடிப்பகுதியை தொட்டபடி வெள்ளம் சென்றது. ஆறு முழுமைக்கும் தண்ணீர் நிரம்பி சென்றதால் மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். தண்ணீர் அதிகம் சென்றதால் போலீசார் நொய்யல் ஆற்றின் கரையோரம் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தினார்கள். அதுபோல் வருவாய்த்துறை அதிகாரிகள் நொய்யல் கரையோர மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனர்.


Next Story