கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு18 கிலோ சிக்கன் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 18 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 18 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓட்டல்களில் சோதனை
நாமக்கல் மாவட்டம் சந்தைப்பேட்டை புதூர் பகுதியை சேர்ந்த மாணவி கலையரசி (வயது 14) ஒரு ஓட்டலில் சவர்மா வாங்கி சாப்பிட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். மாணவி பலியானதை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 32 ஓட்டல்களில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஓட்டல்களில் 18 கிலோ கெட்டு போன சிக்கன் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் தரமில்லாத 12 கிலோ சாதம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வைத்து இருந்தது தெரிந்தது. இதை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்
மேலும், ஓட்டல்களில் இருந்த 500 கிராம் மையோனிஸ், கலர் பொடி 300 கிராம், சவர்மா சிக்கன் 2 கிலோ ஆகியவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அலுவலர்கள் 6 ஓட்டல் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோன்று மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஓட்டல்களில் ஆய்வு செய்தனர்.