கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள்


கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள்
x

கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள் என்று திட்டக்குடி டி.எஸ்.பி. காவ்யா வேண்டுகோள் விடுத்தாா்.

கடலூர்

ராமநத்தம்:

ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் வணிகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவ்யா தலைமை தாங்கி பேசுகையில், திருட்டு சம்பவங்களை தடுக்கவும், திருட்டில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவும் அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இரவில் கடைகள் முன்பு வெளியாட்களை தங்க அனுமதிக்க கூடாது. சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக ராமநத்தம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் இன்பெக்டர்(பொறுப்பு) ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், வணிகர் சங்க தலைவர் ராஜன், துணை தலைவர் மாயகிருஷ்ணன், வணிகர் சங்க செயலாளர் ஜலாவுதீன், துணை செயலாளர் சுந்தரம், வணிகர் சங்க பொருளாளர் கண்ணன் உள்ளிட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.


Next Story