என்.டி.பி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்


என்.டி.பி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் என்.டி.பி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம், சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6-வது நாளாக போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ. சார்பில் என்.டி.பி.எல். அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் நேற்று தூத்துக்குடி சிதம்பரம் நகர் பஸ் நிறுத்தம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். மாநில செயலர் ரசல் முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன் சிறப்புரையாற்றினார். என்.டி.பி.எல். அனல் மின் நிலைய திட்டச் செயலர் அப்பாதுரை கோரிக்கை விளக்க உரையாற்றினார். இதில் சி.பி.எம். மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாநகர செயலாளர் ராஜா, ஒன்றியச் செயலாளர் சங்கரன், புறநகர் செயலாளர் ராஜா, சி.ஐ.டி.யு. நிர்வாகிகள், என்.டி.பி.எல். ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story